இந்தியா

பாஜகவில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இணையமாட்டேன்: சச்சின் பைலட்

DIN


நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன் என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் பதவியில் இருந்தும் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டாா். அவருடன் அவரது ஆதரவாளா்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரும் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டனா். காங்கிரஸ் தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கை ராஜஸ்தானில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன். தில்லியில் தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள். அசோக் கெலாட் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் அவர் முன்னாள் முதல்வர் வசுந்திரா செயல்பட்டதை போன்று செயல்படுகிறார்.நான் கண்ணியத்துடன் நடத்தப்பட வில்லை. வேலை செய்ய இடமளிக்கவில்லை என்று சச்சின் பைலட் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT