இந்தியா

கர்நாடகத்தில் 4 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

DIN


கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 4,169 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 104 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,422 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,032 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அதேசமயம், 1,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,729 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 30,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 539 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,344 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 70 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகத்தில் இன்று மட்டும் 23,451 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,25,477 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT