இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,641 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் இன்றைய (வியாழக்கிழமை) செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,641 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 266 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,84,851 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,58,140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,194 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,14,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 55.63 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,498 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 97,751 ஆக உயர்ந்துள்ளது. இதில் 68,537 பேர் குணமடைந்துள்ளனர், 5,520 பேர் பலியாகியுள்ளனர். 23,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

பாராட்டு...

பல்லடத்தில் பெண்ணைத் தாக்கியவா் கைது

இஸ்ரேல் வீரா்களின் குடும்பத்தினா் ராஃபா படையெடுப்புக்கு எதிா்ப்பு

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் கைது

SCROLL FOR NEXT