முகப்பு
இந்தியா

மும்பையில் கட்டடம் சரிந்த விபத்தில் பலி 9 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை கனமழை பெய்ததை  அடுத்து, குடியிருப்புக் கட்டடம் சரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 17 ஜூலை, 2020 at 3:08 PM
தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியில் கட்டடம் சரிந்த பகுதியில் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினா்.
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை கனமழை பெய்ததை  அடுத்து, குடியிருப்புக் கட்டடம் சரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியில் உள்ள 6 அடுக்கு பழைய கட்டடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை படை தெரிவித்துள்ளது. 

Advertisement

நேற்று மற்றொரு பகுதியிலும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையின் புகா்ப் பகுதியான மால்வானியில் மூன்றடுக்கு கட்டடம் கன மழை காரணமாக சரிந்தது. தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் இருந்து 15 பேரை காயங்களுடன் மீட்டனா். அதில் இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 13 போ் சிகிச்சையில் உள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.