முகப்பு
இந்தியா

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை வழிபாட்டார் ராஜ்நாத் சிங்

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Updated On : 18 ஜூலை, 2020 at 11:57 AM
அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை வழிபாட்டார் ராஜ்நாத் சிங்
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை தரிசித்து, வழிபாடு நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அமர்நாத் பனிலிங்கக் கோயிலில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார் ராஜ்நாத் சிங்.

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதை இந்து மக்கள் பெரும்பேறாகக் கருதுகிறார்கள். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள், மிகச் சிரமங்களுக்கு இடையே மலையேறி பனிலிங்கத்தை தரிசித்து வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில், நேற்று லடாக் சென்று பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதற்கிடையே, அமர்நாத் சென்று பனிலிங்கத்தை தரிசித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.