முகப்பு
இந்தியா

அசாமில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் வெடிவிபத்து: 3 பேர் காயம்

அசாம் மாநிலம் பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் 5வது எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் அங்கே இருந்த 3 வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
அசாமில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் வெடிவிபத்து: 3 பேர் காயம்
பகிர்:


தின்சுகியா: அசாம் மாநிலம் பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் 5வது எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் அங்கே இருந்த 3 வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.

தின்சுகியா மாவட்டம், பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நேரிட்டது. வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் இருந்து வெளிநாட்டு நிபுணர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஆயில் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிரிதிப் ஹஸாரிகா கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 27-ம் தேதி பக்ஜன் பகுதியில் இருந்த எண்ணெய் கிணற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எரிவாயு தயாரிப்புப் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. பிறகு இதே கிணற்றில் ஜூன் 9-ம் தேதி தீ விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →