இந்தியா

இரண்டு மகள்களை ஏர் இழுக்க வைத்த விவசாயி: சொன்னபடி டிராக்டர் வழங்கிய பாலிவுட் நடிகர் 

ஆந்திரத்தில் மாடுகளுக்கு பதிலாக இரண்டு மகள்களை ஏர் இழுக்க வைத்த விவசாயிக்கு, பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வழங்கி உதவியுள்ளார். 

DIN

ஆந்திரத்தில் மாடுகளுக்கு பதிலாக இரண்டு மகள்களை ஏர் இழுக்க வைத்த விவசாயிக்கு, பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வழங்கி உதவியுள்ளார். 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ்வர ராவ். இவர் டீ கடையும் நடத்தி வருகிறார். ஆனால், ஊரடங்கு காரணமாக டீ கடையில் போதிய வருமானம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுத்தார்.

ஆனால், அவரிடம் மாடுகள் இல்லை. மேலும் டிராக்டர்களை வாடகைக்கு எடுப்பதற்கு பணமும் இல்லை. இந்த நிலையில்தான் விவசாயிக்கு, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உதவ முன்வந்தனர். மாடுகளுக்கு பதிலாக மகள்களை ஏர் இழுக்கச்செய்து தன் நிலத்தில் உழவு செய்தார். அந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இச்சம்பவத்தை அறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், விவசாயி குடும்பத்திற்கு ஒரு டிராக்டர் வழங்குவதாகவும், மேலும் சிறுமிகள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று காயத்ரி ஏஜென்சி மூலம் பாலிவுட் நடிகர் சோனு சூட், விவசாயிக்கு டிராக்டர் வழங்கி உதவி செய்துள்ளார்.

இதனை பெற்றுக்கொண்ட விவசாயி, நடிகருக்கு நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT