இந்தியா

ஆந்திரத்தை மிரட்டும் கரோனா: ஒரே நாளில் 7,948 பேருக்குத் தொற்று, 58 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

UNI


ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகின்றன. இந்தி நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,948 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1,10,297 அதிகரித்துள்ளது. 

மேலும் ஒரே நாளில் 58 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த உயிரிழப்பு 1,148 ஆக உயர்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

திங்கள்கிழமை காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை 62,979 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், 7,948 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதில், கர்னூல் (174), கிருஷ்ணா (153), கிழக்கு கோதாவரி (134), குண்டூர் (109), விசாகப்பட்டினம் (90), அனந்தபூர் (89), சித்தூர் (89) மற்றும் மேற்கு கோதாவரி (89) ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 56,527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 52,622 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 1,10,297 பேரில், கிழக்கு கோதாவரி (16,063), கர்னூல் (13,380), குண்டூர் (11,692), அனந்தபூர் (10,987) மற்றும் மேற்கு கோதாவரி (9,577) ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மாநிலத்தில் இதுவரை 17,49,425 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT