இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கரோனா சிகிச்சை பெற்றுவந்தவர் தற்கொலை

ANI

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் நகரில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் சரர்பூர் நகரில் உள்ள உத்கர்ஷ் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் நிகழ்ந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். 

சதர்பூரின் தலைமை காவலர் உமேஷ் சுக்லா கூறுகையில், 

கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது. 

கடந்த ஜூலை 27-ல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று இறந்தவரின் உறவினர் ரஷித்கான் கூறியுள்ளார். 

மேலும், நாங்கள் நேற்று தொலைபேசியில் பேசினோம், பாதிக்கப்பட்டவர் உணவை விழுங்குவதில் சிரமம் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார். அவர் உயிரிழந்ததற்கான காரணம் தெரிவியவில்லை என்றார். 

மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT