இந்தியா

ஜூலை 29 வரை 1,81,90,382 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

ANI

நாட்டில் ஜூலை 29-ம் தேதி வரை மொத்தம்1,81,90,382 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,46,642 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 29 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 1,81,90,382க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் அதிகபட்சமாக 52,123 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 15 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 5,28,242 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 10,20,582 குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 34,968 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT