இந்தியா

ஆந்திரத்தில் 10,167, கர்நாடகத்தில் 6,128 பேருக்கு கரோனா

DIN


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,557 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,281 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 60,024 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,632 ஆக உயர்ந்துள்ளது. இதில் 69,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,230 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,694 பேர் குணமடைந்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பெற்று வருவோரில் 620 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT