இந்தியா

அசாமில் 100ஐ நெருங்குகிறது கரோனா பலி: ஒரேநாளில் 1,348 பேருக்குத் தொற்று

UNI


அசாமில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில் இறப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் புதிதாக 1,348 தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 36,295 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

புதிதாக, கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் 348 பேருக்கும், கம்ரூப் (கிராமப்புறம்) மாவட்டத்தில் 127 பேருக்கும் தொற்றுப் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, ஒரேநாளில் நான்கு பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,214 நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து, 27,832 பேர் நோயிலிருந்து விடுபட்டு வெளியேற்றப்பட்டனர். 

தற்போது மருத்துவமனையில் 8,368 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT