இந்தியா

ஒடிசாவில் 30 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 169 பேர் பலி

UNI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,203 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 

28 மாவட்டங்களைச் சேர்ந்த 1,203 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் 758 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பதிவாகியுள்ளன. மீதமுள்ள 445 பேர் உள்ளூரில் பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கோர்தா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நயாகர், ராயகடா, சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 5,00,238 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 30,378 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 18,939 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 11,234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT