இந்தியா

ஆக. 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து

DIN

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT