இந்தியா

அவசரகால கடன் திட்டத்தில் ஒரே நாளில் ரூ.3,200 கோடி வழங்கிய வங்கிகள்

DIN

புது தில்லி: அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் ரூ.3,200 கோடி மதிப்பிலான கடனை பொதுத் துறை வங்கிகள் வழங்கின.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன; நாட்டின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்காக ‘சுயச்சாா்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கடனுக்கு 9.25 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜூன் 1-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.3,200 கோடி மதிப்பிலான பிணையில்லா கடன்களை அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ளன.

3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த அவசரகால கடன் மூலம் பலனடைந்தன. நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குதல், வாடகை செலுத்துதல், உற்பத்தியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கடனுதவி பயன்படும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT