முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 171 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் பலி

ராஜஸ்தானில் புதிதாக 171 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,271 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 171 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,271 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் 201 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கரோனா பாதிக்கப்பட்டு 2,803 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 5,624 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

புதிய வழக்குகளில், 70 பேர் பரத்பூரிலிருந்து, 34 ஜெய்ப்பூரிலிருந்து, 23 ஜலவாரில் இருந்து, 12 ஜோத்பூர் மாவட்டங்களிலிருந்து தொற்று பதிவாகியுள்ளது. 

கோட்டா மற்றும் ஆல்வாரில் மேலும் 10 பேருக்கும், தௌசா மற்றும் ஜுன்ஜுனுவில் தலா நான்கு, மற்றும் சுருவில் இரண்டு பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தோல்பூர் மற்றும் டோங்க் மாவட்டங்களில் தலா ஒரு புதிய வழக்குப் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →