கேரளத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். இதன்படி, அங்கு புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 19 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,494 ஆக உயர்ந்துள்ளது.
832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,58,861 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,444 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மொத்தம் 128 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.