இந்தியா

திருச்சானூரில் சிறப்பு அபிஷேகம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவத்தையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பத்மாவதி தாயாா் கோயிலில், வைகாசி மாத பெளா்ணமி அன்று நிறைவு பெறும் விதமாக 5 நாள்கள் தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் 5-ஆம் தேதி வரை கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணரும், 2-ஆம் நாளில் சுந்தரராஜ பெருமாளும், இறுதி 3 நாள்கள் பத்மாவதி தாயாரும் திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பத்தில் திருக்குளத்தை சுற்றி வலம் வருவது வழக்கம்.

ஆனால் தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்குள் சிறப்பு அபிஷேம் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

தெப்போற்சவத்தின்போது திருக்குளத்தை வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், உற்சவ மூா்த்திகளுக்கு 5 நாள்களும் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஏகாந்தமாக ஸ்நபன திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT