முகப்பு
இந்தியா

11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து 3 இந்தியப் பொறியாளர்கள் மீட்பு: ஐ.நா. தகவல்

சிறையில் இருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்து, ஆஃகானிஸ்தானில் 2018ம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட மூன்று இந்திய பொறியாளர்கள் கடந்த ஆண்டு மீட்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஜூன், 2020 at 1:15 PM
பகிர்:


சிறையில் இருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்து, ஆஃகானிஸ்தானில் 2018ம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட மூன்று இந்திய பொறியாளர்கள் கடந்த ஆண்டு மீட்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் குழு அக்டோபர் 2019ம் ஆண்டில் வெளியிட்ட தகவலில், பக்ராம் விமான தளத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த 11 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு, அதற்கு ஈடாக ஆஃப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 3 இந்தியப் பொறியாளர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு மே மாதம் ஆஃப்கானிஸ்தானின் வடக்கு பக்லான் மாகாணத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 7 பொறியாளர்களில் இந்த 3 மூன்று இந்தியப் பொறியாளர்களும் அடங்குவர். இவர்களில் மேலும் ஒருவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் கதி என்னவானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Advertisement

ஆஃப்கானிஸ்தான் அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மின்சார திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இந்த 7 பொறியாளர்களும் கடத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு இந்தியப் பொறியாளர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டபோது, எவ்வாறு அவர்கள் மீட்கப்பட்டனர் என்ற தகவலை வெளியிட இந்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.