இந்தியா

பெட்ரோல், டீசல் விலை 2-ஆவது நாளாக 60 காசுகள் அதிகரிப்பு

DIN


புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை தலா 60 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசலின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அமலுக்கு வந்தது. 

அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தலா 60 காசுகள் வரை ஞாயிற்றுக்கிழமை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அவற்றின் விலை தலா 60 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை 53 காசுகள் உயர்ந்து ரூ.76.60-ஆக நிர்ணயிக்கப்பட்டது. டீசல் விலை ரூ.68.74-இல் இருந்து ரூ.69.25-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த மார்ச் 16-ஆம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டது. அதன் பிறகு கரோனா நோய்த்தொற்றுப் பிரச்னை, அதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றத்தை மேற்கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT