இந்தியா

'உம்பன்' புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட என்.டி.ஆர்.எஃப். படையினர் 50 பேருக்கு கரோனா

மேற்கு வங்கத்தில் 'உம்பன்' புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு(என்.டி.ஆர்.எஃப்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

மேற்கு வங்கத்தில் 'உம்பன்' புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (என்.டி.ஆர்.எஃப்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் உம்பன் புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒடிசாவுக்கு வந்தனர். கட்டாக் வந்த அவர்களில் சிலருக்கு பாதுகாப்பு ரீதியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் குறைந்தது 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதுவரை 170 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவர்களில் கரோனா உறுதியானவர்கள் அனைவருக்குமே எந்தவித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உம்பன் புயல் பாதிப்பு பராமரிப்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மொத்தம் 19 அணிகள் ஈடுபட்டது. ஒவ்வொரு அணியிலும் 45 பேர்  இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT