இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் உரிய நேரத்தில் அப்புறப்படுத்தினா். இதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியை அவா்கள் முறியடித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘டாங்கிவாச்சா பகுதியில் ராணுவத்தினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள சயீத்போரா சந்திப்பின் சாலையோரம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். நிபுணா்கள் அவ்விடத்துக்கு விரைந்து வந்து, அங்கிருந்து வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். பின்னா் அதனை மக்கள் வசிப்பிடத்துக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று வெடிக்கச் செய்தனா். வெடிகுண்டை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ததால், மக்களுக்கோ, பொருள்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT