கணவருடன் தொடர்பு: பெண்ணைச் சுட்டுக்கொன்ற மனைவி; உ.பி.யில் அதிர்ச்சி!
கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை மனைவி சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை மனைவி சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாபனா. இவர் தனது கணவருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
முதலில் படுகாயங்களுடன் அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது ஷாபனாவை கைது செய்து மொராதாபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது கணவருடன் தொடர்பில் இருந்ததை தாங்கிக்கொள்ள முடியாததால் கொலை செய்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.