இந்தியா

கரோனா பேரிடரை நல்வாய்ப்பாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி உரை

தற்சார்பு இந்தியாவுக்கான திருப்பு முனையாக கரோனா போராட்டத்தையே நமக்கான நல்வாய்ப்பாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

DIN


புது தில்லி: தற்சார்பு இந்தியாவுக்கான திருப்பு முனையாக கரோனா போராட்டத்தையே நமக்கான நல்வாய்ப்பாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய தொழில் சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்திய தொழில் சபை ஏற்படுத்திய பல்வேறு வாய்ப்புகளால் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில். இது மிகப்பெரிய வரலாறு ஆகும்.

இந்தியா கரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், வெள்ளம், வெட்டுக்கிளி தாக்குதல், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களையும் எதிர்கொண்டு வருகிறது.

கரோனா தொற்றுப் பரவலால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரிடரை, தற்சார்பு இந்தியா திட்டத்துக்கான நல்வாய்ப்பாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT