இந்தியா

கரோனா: இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்வு

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது.  

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30ஆம் தேதியுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, கடந்த 24 மணிநேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 325 பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,04,568-ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,07,958-ஆக உள்ளது. தமிழகத்தில் 44,661, தில்லியில் 41,182, குஜராத்தில் 23,544, உ.பி.,யில் 13,615 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

கட்டாய முஸ்லீம் தோழி: எதிர்நீச்சல் நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுவசந்தம் நடிகை!

ஜெய் ஆகாஷ் - ரேஷ்மா முரளிதரனின் புதிய தொடர்

சினிமாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை தொடர் நடிகை!

SCROLL FOR NEXT