கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த 42 காவலர்கள் பலி: அமைச்சர்

42 காவலர்கள் கரோனாவுக்கு பலியானதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

PTI


மும்பை: நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 3,661 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 42 காவலர்கள் கரோனாவுக்கு பலியானதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுவரை 2,248 காவலர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர் என்றும் அமைச்சர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் இதுவரை 6,17,242 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அதில் 730 பேர் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், மாநில அரசு சார்பில் 134 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 4,437 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT