கோப்புப்படம் 
இந்தியா

மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: கரோனா காரணமா?

தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் கரோனா தொற்று உள்ளவர் என்று சந்தேகிக்கப்படும் இளம்பெண் ஒருவர், மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

IANS

நொய்டா: தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் கரோனா தொற்று உள்ளவர் என்று சந்தேகிக்கப்படும் இளம்பெண் ஒருவர், மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக நொய்டா காவல்துறை துணை ஆணையர் சங்கல்ப் ஷர்மா கூறியதாவது:

நொய்டாவின் 24-ஆவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சன்(22). இவர் கடந்த 14-ஆம் தேதியன்று இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாயன்று அவர் மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்பது குறித்து கண்டறிவதற்காக, அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்ட  பின்னர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT