இந்தியா

தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா உறுதி

​தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திங்கள்கிழமை இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் செவ்வாயன்று தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இருந்தபோதிலும், அவருக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லி துணை நிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT