இந்தியா

தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் நேற்றும், இன்றும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 

நேற்று கரோனா பரவல் குறைவாக உள்ள 21 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி இன்று கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மாநிலங்களில் கரோனா பரவல் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களிடம் பிரதமர் கேட்டறிவார் என்று தெரிகிறது. அதேபோன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் தேவையான நிதி உதவிகளைக் கோரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் லடாக் எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில முதல்வர்களும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT