இந்தியா

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தின் 3வது தளத்தில் தீ விபத்து

ANI

தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று தீ விபத்து நேரிட்டது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில், நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி நாசமாயின.

கரோனா அச்சம் காரணமாக, நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி மூலமாக நடப்பதால், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால், நீதிமன்ற ஆவணங்கள் இருக்கும் தளத்தில் தீவிபத்து நேரிட்டிருப்பதால், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT