இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை 

UNI


ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். 

புல்வாமா மாவட்டம், பாம்பூரில் உள்ள மீக் கிராமத்தில் ராஷ்டிரிய ரைஃபின்ஸ்(ஆர்.ஆர்), சிறப்புச் செயல்பாட்டுக் குழு(எஸ்ஓஜி) மற்றும் சிஆர்பிஎஃப்  ஆகியவை ஒருங்கிணைந்து அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தினர். 

பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி இன்று உயிரிழந்துள்ளார். 

இதற்கிடையில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த பகுதியில் இணையம் மற்றும் மொபைல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மாதத்தில் தெற்கு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் இதுவரை சுமார் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT