இந்தியா

புதுச்சேரியில் 374 பேருக்கு கரோனா பரிசோதனை: 52 பேருக்குத் தொற்று

UNI

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் கூறியுள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியது, 

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி இன்று மட்டும் 374 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், 52 பேருக்குத் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுவரை அந்த மாநிலத்தில் மொத்தம் 11,992 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 11,486 பேருக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது 161 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், 31 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், எட்டு பேர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் என மொத்தம் 200 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

புதுவையில் இதுவரை 338 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 131 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT