கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

DIN

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4,26,910 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,703 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடக மாநிலத்தில் திங்களன்று மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 பேர் ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல இன்று மட்டும் 5 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்’. இதையடுத்து மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் 111 பேர் தொற்று குணமடைந்து மருத்துவமனையில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,730 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT