முகப்பு
இந்தியா

கோவாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி

கோவாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

Updated On : 22 ஜூன், 2020 at 11:51 AM
Goa reports first COVID-19 death
பகிர்:

கோவாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

வடக்கு கோவாவின் மோர்லெம் நகரைச் சேர்ந்த 85 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மூச்சுத்தினறல் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 

Advertisement

இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ள முதல் மரணம் இதுவாகும். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

நாட்டின் மற்ற பகுதியை விட கோவாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாநிலத்தில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் ரானே கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.