ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு (கோப்புப்படம்) 
இந்தியா

ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு

ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில், இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN


ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில், இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"ஜூன் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, அதிக மக்கள் தொகையைக் கொண்டபோதிலும் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில், சராசரியாக 30.04 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் உலகளவிலான சராசரி 3 மடங்கு கூடுதலாக 114.67 ஆக உள்ளது. 

அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 671.24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரேசிலில் முறையே 583.88, 526.22 மற்றும் 489.42 ஆக உள்ளது."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT