இந்தியா

கரோனா வைரஸ் உதவி மையங்கள் அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் உத்தரவு

PTI

லக்னௌ: மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கரோனாவைரஸ் உதவி மையங்களை அமைக்குமாறு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலும் கூட கரோனாவைரஸ் உதவி மையங்களை அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அதிகாரிகளுடனான கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மேலும், கரோனா வைரஸ் உதவி மையங்களில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், தெர்மா மீட்டர், கிருமிநாசினிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற உதவி மையங்களை அமைக்க தனியார் மருத்துவமனைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT