ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பு 10,331 ஆக உள்ளது.
அனந்தபூரில் அதிகபட்ச கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர், கர்னூல், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தற்போது 5,423 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 4,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.