இந்தியா

கூட்டத்தின் கண்முன்னே விநோத விபத்தில் சிக்கி உயிரிழந்த யானைக்குட்டி!

IANS

கொல்கத்தா: தனது கூட்டத்தின் கண்முன்னே எதிர்பாரா விபத்தில் சிக்கி யானைக்குட்டி  ஒன்று உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாவது:

மேற்கு வங்கத்தின் அலி புர்துவார் மாவட்டத்தில் ஜல்தபரா தேசிய வனப்பூங்கா அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த வனத்தின் வடக்குப் பகுதியில் இருந்து யானைக் கூட்டம் ஒன்று, கிழக்கு மதரிஹர் பகுதியில் உள்ள பாக்குத் தோட்டம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

அப்போது அங்கிருந்த மரக்கிளையொன்று எதிர்பாராவிதமாக சாய்ந்துள்ளது. அப்படி சாயும்போது அருகில் இருந்த மின்கம்பியையும் சேர்த்து இழுத்துள்ளது. அதேநேரத்தில் சரியாக அங்கு வந்த யானைக்குட்டி ஒன்றின் மீது அந்த மின்சாரக் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி குட்டி உயிரிழந்துள்ளது.  

யானைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர், அவற்றால் மேற்கொண்டு தங்களுக்கு எதுவும் ஆபத்து வராமல் இருக்க சத்தம் எழுப்பி அவற்றை விரட்டி விட்டு, உள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஜூன் 16-ஆம் தேதியிலிருந்து அந்தப்பகுதியில் யானைகள் பலியாவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT