முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி; எண்ணிக்கை 54 ஆக உயர்வு

மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி
பகிர்:


மும்பை: மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு பலியான 54 காவலர்களில் 34 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் 4,200 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் மூன்று ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 991 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 7 காவலர்கள் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.