இந்தியா

பிரேசிலில் ஒரே நாளில் 46 ஆயிரம் பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 12 லட்சம்

UNI

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 46,860 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அந்த நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,74,974 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா பாதித்து 990 பேர் பலியாகியுள்ள நிலையில் அந்த நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், பிரேசிலில் நேற்று புதிதாக 39,483 பேருக்கு தொற்று நோய் கண்டறியப்பட்டது. 1,141 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

உலகளவில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விகிதங்களில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT