இந்தியா

பொதுமுடக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரயில்வே: 200 திட்டங்கள் நிறைவு

DIN

கோவிட்-19 ஊரடங்கு காலத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி முக்கியத்துவம் வாய்ந்த 200 ரயில்வே பராமரிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பயணிகள் சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய ரயில்வேயின் பணி வீரர்கள், ரயில்வே பணிமனையைப் புனரமைத்தல், பழைய பாலங்களைப் பழுதுபார்த்து மறுசீரமைத்தல், இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவதுடன் மின்மயமாக்குதல் மற்றும் தண்டவாள மாற்று வழித்தடங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நீண்டகாலப் பராமரிப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர். 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த முடிக்கப்படாத திட்டங்கள் பெரும்பாலும் இந்திய ரயில்வே எதிர்கொண்ட தடைகளாக இருந்து வந்தன.

ரயில் சேவையை பாதிக்காமல் இந்தப் பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ‘வாழ்வில் ஒரே முறை கிட்டும் வாய்ப்பு’ என்று கருதி ஊரடங்கு காலத்தில் அவைகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தப் பணிகளில் தடைகளை நீக்குவதற்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் 82 பாலங்களை புனரமைத்தல் / மறுசீரமைத்தல், லெவல் கிராசிங் கேட்டுக்கு பதிலாக பாலத்தின் கீழ் 48 வரையறுக்கப்பட்ட உயரம் கொண்ட சுரங்கப்பாதை / சாலை அமைத்தல், 16 நடைபாலம் கட்டுதல் / வலுப்படுத்துதல், 14 பழைய நடைபாலம் அகற்றுதல் , 7 மேம்பாலம் தொடங்குதல், 5 பணிமனை மறுவடிவமைப்பு, 1 இரயில் பாதையை இரட்டித்து மின்மயமாக்கல் மற்றும் 26 இதர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முக்கிய திட்டங்களில் தமிழகத்தில் நடந்த இரண்டு திட்டங்களாவன..

ஜோலர்பேட்டையில் (சென்னை பிரிவு, தெற்கு ரயில்வே) பணிமனைப் புனரமைப்புப் பணிகள் மே 21, 2020 அன்று நிறைவடைந்தன. இந்த வளைவைச் சரி செய்ததின் மூலம் பெங்களூரு முடிவில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வேகத்தை அதிகரிப்பதற்கும் ஒரே நேரத்தில் எளிதாக வரவேற்பதற்கும், அனுப்புவதற்கும் வழிவகுத்தது.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் அணுகுமுறையில் 8 ரயில் தடங்களை கடக்கும் மேம்பாலங்களை அகற்றும் பணி மே 9, 2020 அன்று நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT