இந்தியா

பிகாரில் அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

பிகாரில் அமைச்சர் விநோத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

பிகாரில் அமைச்சர் விநோத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 19,906 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,28,859ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 410 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் பிகாரில் அமைச்சர் விநோத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்து, அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே அமைச்சரின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் விநோத் சிங் உறுதி செய்துள்ளார்.

பிகார் மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 9,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT