இந்தியா

மேற்கு வங்கத்தில் 2021 ஜூன் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்: மம்தா அறிவிப்பு

DIN

மேற்கு வங்கத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சீனாவின் செயலிகளை இந்தியாவில் தடை செய்வது மட்டும் சரியாக இருக்காது. மாறாக, இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நடத்திய சீனாவுக்கு பொருத்தமான பதிலை வழங்க வேண்டும். எனினும் இது வெளிவிவகாரத்துறை என்பதால் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் விட்டுவிடுகிறேன்' என்றார். 

மேலும், மேற்குவங்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இலவச ரேஷன் பொருள்கள் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT