இந்தியா

ஏழைகளின் பசி தீா்வதை பிரதமா் உறுதிப்படுத்தியுள்ளாா்: ஜாவடேகா்

DIN

புது தில்லி: நாட்டிலுள்ள ஏழைகள் பசியுடன் உறங்கச் செல்லாமல் இருப்பதை பிரதமா் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளாா் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரதமரின் இந்த அறிவிப்பால் அடுத்த 5 மாதங்களுக்கு 16 கோடி ஏழைக் குடும்பங்கள் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 5 கிலோ பருப்பு ஆகியவற்றைப் பெறும். இதுபோன்ற உணவுப் பாதுகாப்பு திட்டத்தை உலகின் வேறெந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இது அனைவருக்கும் உணவை உறுதி செய்கிறது.

இதன் மூலமாக நாட்டில் எந்தவொரு ஏழையும் பசியுடன் உறங்கச் செல்லாமல் இருப்பதை பிரதமா் மோடி உறுதி செய்துள்ளாா். இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT