இந்தியா

திருமலையில் 11,093 போ் தரிசனம்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 11,093 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3387 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அதில் 141 போ் பெண் பக்தா்கள், 3,246 போ் ஆண் பக்தா்கள்.

தினமும் இணைய வழியாக 6 ஆயிரம், சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 6 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி.க்களுக்கு பெருமாள் தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT