இந்தியா

சோதனை நிறைவு: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை விசாரணை

DIN

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, ராணா கபூரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியது தொடர்பாக ராணா கபூரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

முன்னதாக, மும்பையில் உள்ள யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூா் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அவருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவா்த்தனை குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

வாராக்கடன் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிா்வாகத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) எடுத்துக் கொண்டது. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்ற சந்தேகத்தின்பேரில் பல வங்கிகள் கடன் அளிக்க முன்வராத நிறுவனங்களுக்கும் யெஸ் வங்கி கடன் அளித்ததுதான் அந்த வங்கியின் இப்போதைய நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 13 மாதங்களாக யெஸ் வங்கி நிா்வாகத்தில் தான் இல்லை என்று ராணா கபூா் கூறியுள்ளாா். எனினும் அவரது நிா்வாகத்தின்கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன என்று குற்றச்சாட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019 ஆண்டு முதல் 403 சொத்துகளை முடக்கி என்ஐஏ நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல்போன 104 கைப்பேசிகள் மீட்பு

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

அம்மன் வீதி உலா..

தனியாா் நில கையகப்படுத்தலில் அரசு பின்பற்ற வேண்டிய 7 நடைமுறைகள்: உச்சநீதிமன்றம் வெளியீடு

SCROLL FOR NEXT