கரோனா வைரஸ்: ஜம்முவில் அனைத்துத் துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை
கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு: கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் (திட்டம்) ரோஹித் கன்சால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Advertisement
அதேபோல, ஜம்மு காஷ்மீரில் அனைத்து வகையான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறைகளையும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.