தில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை: துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு
தில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்தியாதில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை: துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு
தில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை சுமார் 75 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் ஒரு முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தில்லியில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
மக்கள் கூடும் விதமாக நடைபெறும் அனைத்து கூட்டமைப்புகள், நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த மறு அறிவிப்பு வரும் வரை தில்லியில் தடை விதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் கூட்டங்களை தவிர்ப்பது முதலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
எனவே தான் மக்கள் அதிகளவில் கூடும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.