இந்தியா

கரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் பலி: தில்லியில் இரண்டாவதாகப் பெண் மரணம்

DIN

கரோனா வைரஸ் தொற்றுக்காகத் தில்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண் தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏற்கெனவே சா்க்கரை நோயும், இரத்தக்கொதிப்பும் இருந்த அவருக்கு கரோனா வைரஸ் இருப்பதும் தெரியவந்தது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

இதனை மத்திய அரசும், தில்லி சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 81 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT