இந்தியா

கரோனா: மேற்கு வங்கத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை

DIN


கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2,56,682 பேர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 1,977 பேர் வீட்டிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்ததன்படி, அங்கு இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க அரசு அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது.

இதுகுறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"பொதுநலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மதரசாக்கள், சிஷூ சிக்ஷா கேந்திரம் (எஸ்எஸ்கே), மாத்யமிக் சிக்ஷா கேந்திரம் (எம்எஸ்கே) என அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மார்ச் 16, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் பள்ளித் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது. எனினும் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT